இது அரசியல் வாதிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமான சுதந்திரம்...... இதை கொண்டாடித்தான் ஆக வேண்டுமா ....?- என்ற ரீதியில் சில பல பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இன்று முகப்புத்தகத்தில் பார்க்க முடிந்தது......
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரிதான் என்ற தோற்றத்தை உருவாக்கினாலும் அப்படி புறக்கணிப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது......
ஆயிரமாயிரம் தாலிக்கொடிகளும்,ஆயிரமாயிரம் தொப்புள் கொடிகளும் அறுத்தெறியப் பட்டிருக்கிறது இந்த சுதந்திரக் கொடிக்காக......
எத்தனை போராட்டங்கள் ... எவ்வளவு இழப்புகள்....?
வாழ்க்கை முழுவதும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வை, வருடத்தில் ஒருநாள் நினைவு படுத்திக் கொள்வதைக் கூட தவறென்று சொல்லி முதுகெலும்பற்ற காரணங்களால் அதை நியாயப் படுத்த முயல்வது என்ன மனநிலை என்று புரிய வில்லை.......
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்காகவும், கார்ப்பரேட் முதலைகளுக்காகவும் வேண்டி நமது முன்னோர்கள் இந்த சுதந்திரத்தை பாடு பட்டு வாங்கவில்லை....
நாமும் நமது சந்ததியும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக மட்டும் தான்.......
ஆனால் நாம் என்ன செய்தோம்......?
இலவசங்களுக்கு ஆசைப்பட்டோம்.......
ஓநாய்களுக்கு ஓட்டுப் போட்டோம்......
ஓநாய்கள் தேசத்தை அம்பானிகளிடம் அடகு வைத்தது....
தவறு முழுவதும் நம்மிடம் வைத்துக் கொண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்கச் சொல்வது நியாயமா........?
Tweet |
அண்ணா,பல தாலி கொடிகள் அறுக்கப்பட்டன..இன்றும் அறுக்கப்படுகின்றன.இழந்தவைகளை பற்றி பேசும் அதே வேளையில் இழந்து கொண்டிருப்பதையும் உணர வேண்டும்.இன்றைய சுதந்திர தினங்களில்,கிரிக்கெட்டில் மட்டும் கொப்புளிக்கும் தேசப் பற்றுக்கு இன்றைய சுதந்திரத்தின் மறு பக்க வேதனையை எடுத்து சொல்ல வேண்டிய அவசியத்தை கொடுக்க சொல்கிறது கொள்ளையர்களின் அரசு....நீங்களே சொல்லி விட்டீர்கள் அம்பானிகளுக்காக வாங்கப்பட்ட சுதந்திரம் இல்லை இது என்று...சுதந்திரம் கைமாறி உள்ளது.வரலாறு திரும்புகிறது அண்ணா,முன்னோர் போராட்டத்தை இன்று மறுபடியும் எடுத்து செல்லவேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது இந்திய அரசு.நாளை இன்னும் பின்னால் போய் தனி தனி நாடுகளாக முன்பை போல் வாழ போராட்டங்களும் நடை பெறலாம்.போலி இந்திய சுதந்திரம் ஒத்துகொள்ள கூடியது இல்லை...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ.... @சதீஷ் ...
DeleteThis comment has been removed by the author.
Delete@சதீஷ் ; தங்களுக்கு நான் எழுதிய பதில் நீண்டுகொண்டே போனதால் அதை ஒரு தனிப் பதிவை இடுவதற்கான முயற்சியில் இருக்கிறேன்
Delete