இந்திய சுதந்திர தினத்தை ''கருப்புதினம்'' என்று பிரகடனம் செய்த சில மனிதர்களை சமூக வலைத் தளங்களிலும், இணையப் பதிவுகளிலும் பார்க்க முடிந்தது........
இது ஒத்துக்கொள்ள முடியாத போலி சுதந்திரம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சுதந்திரம் , இங்கே சராசரி மனிதனுக்கான எந்த சுதந்திரமும் இல்லை, என்பவையான காரணங்களின் பிண்ணணியில் சுதந்திர தினத்தை புறக்கணிக்க சொல்லி வேண்டுகோள்...
ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற அதிகார வர்க்கங்களிடம் இருந்து நம் மக்களுக்கு இன்னுமோர் சுதந்திரம் தேவை என்பதை நான் மறுக்கவே இல்லை....
ஆனால்....
அதற்கும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை..... இந்தியக் கால்களில் பிணைக்கப் பட்டிருந்த பிரிட்டீஷ் சங்கிலிகளை உடைத்தெறிந்து வாங்கித்தந்த சுதந்திரத்தை, வசதியாய் இது ''போலி சுதந்திரம்'' என்ற ஒற்றை வார்த்தையால் எப்படிப் புறக்கணித்து விட முடியும்.....?
காந்தியும் கட்டபொம்மனும் பகத் சிங்கும் நேதாஜியும் இவர்களைப் போல் இன்னும் லட்சக் கணக்கானவர்களும் செய்த தியாகங்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை இதுதானா.....?
ஒரு அந்நிய தேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாய் கிடந்த நமக்கு எத்தனையோ போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு ஒருநாள் விடுதலை கிடைத்தது....
அந்த நாளைத்தான் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோமே ஒழிய ஜெயலலிதாவும் மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் வங்கித் தந்த சுதந்திரத்திற்கான தினத்தை அல்ல.....
தேசியக்கொடி ஏற்றி கடவுள் வாழ்த்துப் பாடி அந்தப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்து தேசியகீதம் பாடி பிரிந்து செல்கிறோம்... இவ்வளவுதானே இந்த சுதந்திர தினத்தில் நாம் செய்கிறோம்.......
இதைக்கூட செய்ய வேண்டாம் என்று புறக்கணிக்கச் சொல்வதில் என்ன அடிப்படை நியாயம் இருக்கிறது....?
நாட்டைச் சுரண்டி நம்மை நடுத்தெருவில் ஆக்கிக் கொண்டிருக்கும் இந்த நயவஞ்சக நரிக்கூட்டத்திற்கு பாடம் புகட்டுகிறேன் என்று சொல்லி..
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிறையிலிருந்து நாம் மீட்டெடுக்கப்பட்ட நல்ல நாளை கறுப்புக்கொடி காட்டி புறக்கணித்தல் தவறு என்ற உணர்வு வரவே இல்லையா இவர்களுக்கு.....
சுதந்திர நாட்டின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி பிணந்தின்னி கழுகுகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்தது நாம் எல்லோரும் அடங்கிய மக்கள் சமூகம்தானே.....
அரசியல்குண்டர்கள் அடிமைப்படுத்திய நம் சமூகத்திற்கு இப்போதைய தேவை விழிப்புணர்வு....
விழிப்புணர்வுக்கான ஆயுதமாய் தேசப் பற்றை தயவு செய்து கையிலெடுக்காதீர்கள் ......
அடிப்படையில் புறக்கணிக்கப் படவேண்டிய விசயங்கள் ஆயிரம் இருக்கிறது...
அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்....
இலவசங்கள் தருகிறேன் என்று எவனும் வந்தால் எட்டி உதைய சொல்லுங்கள்......
காசு கொடுத்து ஓட்டுக் கேட்பவன் முகத்தில் காறி உமிழச் சொல்லுங்கள்
முடிவாய்
ஒரு தேர்தலை புறக்கணிக்கச் சொல்லுங்கள்......
சுதந்திர தின புறக்கணிப்பு என்ற பிரச்சாரம் என்பது... நம்மை மூளைச் சலவை செய்யக் காத்திருக்கும் சில பிரிவினைவாத சக்திகளுக்கு நாமே சிவப்புக் கம்பளம் விரிப்பதாய் ஆகிவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..
-அறந்தாங்கியான்-
Tweet |
Correct thaan,,,,I also agree
ReplyDeleteநல்லது நண்பரே....
DeleteVizhipunarvunu oru vaarhtai kuripittu irukkeengaley adhuthan namnaatukku ippodhaiya thevai.......arumai arumai athanaiyum ponmozhigal........Sudhandhira dhinathai purakkanikka sonna kulla narigal mugathil nalla kaari umizhndhulleergal arandhaangiyan.....
ReplyDeleteநன்றி நட்பே.... வருகைக்கும் கருத்திற்கும்......
ReplyDeleteஅண்ணா,ஆவேச தாக்குதல்...ஓட்டு மொத்த இந்தியாவில் ஒரு பக்கம் சுதந்திரமும் ஒரு பக்கம் அடக்குமுறையும் இருக்கும்போது எந்த சுதந்திரத்தை கொண்டாட?அகிம்சைக்கு கூட மதிப்பளிக்காத அரசுக்கு இது ஒரு எச்சரிக்கையின் ஆரம்பமாகவே இருக்கட்டும்.சுதந்திர தின போராட்ட வீரர்களை தியாகிகளை மதிப்பதால்தான் இந்த புறக்கணிப்பே.சுய நல விரும்பிக்களுக்கு வேணுமானால்,போலி இந்தியாவை நம்புகிறவர்களுக்கு வேண்டுமானால் சுதந்திர தினங்கள் இனிக்கலாம்.பிரிவினைவாதம் என்பதை அரசே முன்னிறுத்துகிறது.இன்றைய தமிழகம் அண்டை மாநில,நாடுகளின் நடவடிக்கைகளுக்கு இந்திய இறையாண்மையின் கீழ் அடி மேல் அடி வாங்குகிறது.ஓட்டு பொறுக்கும் அரசியல் வியாதிகள்,அவர்களுக்கு சொம்படிக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை தேர்தல் புறக்கணிப்பு என்பது இயலாத ஒன்றே என்று தோன்றுகிறது.ஆனால் அப்படி ஒன்று நடக்கும் பட்சம் புறக்கணிப்பில் நானும் நிற்பேன் உங்களோடு.
ReplyDeleteஅண்ணா,ஆவேச தாக்குதல்////
ReplyDeleteதாக்குதல் ஒன்றும் இல்லை சகோதரா....
ஓட்டு மொத்த இந்தியாவில் ஒரு பக்கம் சுதந்திரமும் ஒரு பக்கம் அடக்குமுறையும் இருக்கும்போது எந்த சுதந்திரத்தை கொண்டாட////
ஒட்டுமொத்த இந்தியாவுமே அந்நிய அடக்குமுறைக்கு ஆட்பட்டு அடிமைப்பட்டு கிடந்த கருப்பு நாட்கள் மறந்து விட்டதா சகோதரா.....?
அகிம்சைக்கு கூட மதிப்பளிக்காத அரசுக்கு இது ஒரு எச்சரிக்கையின் ஆரம்பமாகவே இருக்கட்டும்///
சுதந்திரப் போராட்ட வரலாறே தெரியாத மூடர்களின் அரசுக்கு புறக்கணிப்பு எப்படி எச்சரிக்கை ஆகும்???????
சுதந்திர தின போராட்ட வீரர்களை தியாகிகளை மதிப்பதால்தான் இந்த புறக்கணிப்பே.///
இது எனக்கு புரியவில்லை..... வியர்வை சிந்தி வேலைசெய்து பெற்ற மகனுக்கு ஒரு பிடி சோறு தருகிறாள் தாய்.... தந்த சோற்றை குப்பையில் எறிந்துவிட்டு ''நான் தாயை மதிக்கிறேன்'' என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று எனக்குப் புரியவே இல்லை.
சுய நல விரும்பிக்களுக்கு வேணுமானால்,போலி இந்தியாவை நம்புகிறவர்களுக்கு வேண்டுமானால் சுதந்திர தினங்கள் இனிக்கலாம்.///
வருடத்தில் ஒருநாள் கொடி ஏற்றி நினைவுகூர்கிறோம் அந்தநாளை.... அவ்வளவுதான் வேறு என்ன செய்கிறோம்.....? ''போலி இந்தியா'' என்ற வார்த்தைப் பிரயோகம் விளங்கவில்லை எனக்கு.
பிரிவினைவாதம் என்பதை அரசே முன்னிறுத்துகிறது.இன்றைய தமிழகம் அண்டை மாநில,நாடுகளின் நடவடிக்கைகளுக்கு இந்திய இறையாண்மையின் கீழ் அடி மேல் அடி வாங்குகிறது.////
தலைவணங்கி உடன்படுகிறேன் இந்தக் கருத்தோடு........
ஓட்டு பொறுக்கும் அரசியல் வியாதிகள்,அவர்களுக்கு சொம்படிக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை தேர்தல் புறக்கணிப்பு என்பது இயலாத ஒன்றே என்று தோன்றுகிறது///
இது.... இதத்தான் நானும் சொல்லுறேன்.... இந்த வியாதிகளையும் , வியாதிகளுக்கு குடை பிடிக்கும் குண்டர்களையும் சாடி பதிவு எழுதுங்க சகோதரா...... இவங்கள புறக்கணிக்க சொல்லி மக்கள்கிட்ட விழிப்புணர்வ ஏற்படுத்தலாமே......
நடக்கவே இயலாத காரியம் னு எப்படி உறுதியா சொல்றீங்களோ அதே உறுதியோட அத நடத்த முயற்சிக்கலாம் னு தோணுது......
இன்னிக்கு இந்தியாவ ஆண்டுக்கிட்டு இருக்கிற எந்த வெறி நாயும் பங்களிக்காத , சம்பந்தப் படாத ஒரு நிகழ்வு சுதந்திர தினம்.
அது எப்புடி கருப்புதினம் ஆகும்....? அத ஏன் புறக்கணிக்கனும்..... ?
ஒரு மாநிலம் தேர்தல புறக்கணிச்சா தேசத்துல நிச்சயம் ஒரு மாற்றம் வரும்......
ஆனா...
ஒரு மாநிலம் சுதந்திரதினத்த புறக்கணிச்சா... பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் தேசம் துண்டாடப்பட்டும்.....
எதை நீங்கள் விரும்புகிறீர்கள்....?????????????
ஆனால் அப்படி ஒன்று நடக்கும் பட்சம் புறக்கணிப்பில் நானும் நிற்பேன் உங்களோடு.///
நிச்சயம்.......
அதற்கான விழிப்புணர்வை உங்களின் பதிவுகளில் எதிர் பார்க்கிறேன்.......
நன்றி சதீஷ் வருகைக்கும் கருத்திற்கும்.......
indian enbathil perumai kolgiraen.... nam naattai vida paathugaapaana naadu ena ethaiyum naam koorividamudiyaathu
ReplyDelete