அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Tuesday, May 29, 2012

இணைய(யா) க்காதல்எழுதி முடித்தகவிதையில் என்னை
முற்றுப்புள்ளியக்கிவிட்டு
அடுத்த கவிதைக்கு நீ
ஆயத்தமாகி விட்டாய்.......

தவறொன்றுமில்லை .......

வாசிக்கவே நாதியற்று கிடக்கும்
கவிதையில்
முற்றுப் புள்ளியின் கண்ணீருக்கென்ன
முக்கியத்துவம்?

காதல் ஒப்பனை கலைத்து வீசி
யதார்த்தம் பூசிக்கொண்டு நீ
இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பி விட்டாய் .........

இயல்பே காதலாகிப் போனதால்தானோ என்னவோ....
கலைக்கவும் தெரியாமல் கழுவித்
தொலைக்கவும் முடியாமல் நான்......

அன்றெனக்குத் தெரியவில்லை......
நான் அகத்தில் பூசிய காதலை நீ
நகத்தில் பூசியிருந்தாய் என்று ............

சூழ்நிலையின் முதுகில்
காரணங்களை அடுக்கிவிட்டு
நானற்ற திசையில் நீ
பயணத்தை தொடங்கி விட்டாய்........

ஒரு பயணத்தின் நடுவே சிறகுடைந்து
விடியாத இரவுக்குள் வீழ்ந்து கிடக்கிறேன் நான் ......

உன்னிடம் பதிலில்லாத ஒரு கேள்வி
என்னிடம் பாக்கி இருக்கிறது......

அன்று உன்னை மட்டும்
சுமந்த இதயத்தில்
இன்று உன் நினைவுகளைச்
சுமக்கிறேன் .........

அன்று என்னை மட்டுமே
சுமந்த இதயத்தில் இன்று நீ
எவனையோ சுமக்கிறாய் ......

எப்படி முடிகிறது உன்னால் மட்டும்.......

உன்னைக் காயப் படுத்துவதற்காய் அல்ல.......
குடித்துக் குடித்துச் செரிக்க முடியாததை
எழுத்துக்களால் எரிக்க முயற்சிக்கிறேன்......

இணையக் காதலின்
இணையா கதல்களில் இனி
நமது காதலும் .....
இல்லை இல்லை
எனது காதலும்.........

_ அறந்தாங்கியான் _

7 comments:

 1. உன்னைக் காயப் படுத்துவதற்காய் அல்ல.......
  குடித்துக் குடித்துச் செரிக்க முடியாததை
  எழுத்துக்களால் எரிக்க முயற்சிக்கிறேன்......
  //அட அருமை அன்பரே ஏமாற்றத்தின் வலி தெரிகிறது

  வாழ்த்துக்கள் பல கவி படிக்க ..

  ReplyDelete
 2. word verification ஐ நீக்கினால் பலர் கருதிடுவார்கள் என நினைக்கிறேன் பரிசீலியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. @prem வந்து வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் நட்பே.......

   நிச்சயம் சரிசெய்கிறேன்......

   Delete
 3. நல்ல வரிகள் நண்பரே ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 4. வாசிக்கவே நாதியற்று கிடக்கும்
  கவிதையில்
  முற்றுப் புள்ளியின் கண்ணீருக்கென்ன
  முக்கியத்துவம்?

  ReplyDelete
  Replies
  1. திட்டுறீங்களா......? குட்டுறீங்களா இராஜராஜேஸ்வரி....?

   Delete