அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Thursday, May 31, 2012

அன்புள்ள சங்மாவுக்கு.........

சொந்த வீட்டுலேயே சோறு இல்லேன்னு சொல்லிட்டாங்க.....

பக்கத்து வீட்டுக்காரம்மா தர்றேன்னு சொன்ன
பாயாசத்த நம்பி இப்புடி பசியோட பதவிக்களத்துல
குதிச்சுட்டீங்களே.........

பாவம் சார் நீங்க ............

உங்களப் பாக்கையில......
மதுரை வீரன் கோயிலும்
மஞ்சத்தண்ணி தெளிக்கப்பட்ட ஆடும்-என்
நினைவுக்கு வர்றத தவிர்க்கவே முடியல ........

1999 ல புள்ளைய கிள்ளிவிட்டுட்டு
2012 ல தொட்டிய ஆட்டி விடுறீங்களே........
என்ன கொடும சார்................

சரி சரி அத விடுங்க ...........

அவனவன்
கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்காக
கொலையே பண்ணுரானுங்க........

நீங்க ஜனாதிபதி பதவிக்காக
ஜஸ்ட் ஒரு மன்னிப்புத்தான கேட்டீங்க...........

பாபர் மசூதிய இடிச்சவங்களுக்கே...... அய்யய்யோ
தப்பா சொல்லிட்டேன்
பாரதீய ஜனதாக் கட்சிக்கே பதிமூணு நாள்தான்
ஆதரவு இருந்துச்சுங்கிறத
எதுக்கும் ஒரு மூ(ளை)லைல போட்டு வச்சுக்கங்க ..........


அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்த ஒருவர்
அங்கே அதிபராகும் போது
இந்தியப் பழங்குடியாகிய நான்
இங்கே ஆகக்கூடாதானு கேக்குறீங்களே

அது எப்புடி சார்
உங்களால மட்டும்
பருவமழைல பட்டாசு வெடிக்க முடியுது .......?

அப்புடியே 1988 ல இருந்து
இன்னிக்கு வரைக்கும்
அந்தப் பழங்குடிகளுக்கு நீங்க செஞ்ச
நல்லதை எல்லாம் பட்டியல் போட்டுருந்தீங்கன்னா
நல்லா இருந்துருக்கும் .........

50 வருஷ பாராளுமன்ற பாரம்பரியத்துல
1996 ல எதிர்க்கட்சில இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட
முதல் மக்களவை சபாநாயகர் நீங்கதான்கிறதும் ......

உங்களோட நுட்பமான அரசியல் அறிவுக்கு
இப்பவரைக்கும் சாட்சியம் வகிச்சுக்கிட்டிருக்கிற
A Life in politics என்ற உங்களோட புத்தகமும்......
உங்களுக்கு பெருமை சேக்குற விஷயங்கள்
என்பதில் மாற்றுக்கருத்தே இல்ல........

ஆனா........

அரசு செலவுல ஒலகம் சுத்த
ஆசைப்பட்டு........
சொந்த செலவுல சூனியம்
வச்சுக்கிறீங்களோ..............??????? னு
எனக்கு தோனுது..............

- அறந்தாங்கியான் -

7 comments:

 1. வாழ்நாளெல்லாம் நான் சூத்திரனக்காக உயிர் கொடுக்கும் சூத்திரன் என்று சொல்லிக்கொண்டு சூத்திரன் சஞ்சீவ ரெட்டியை தோற்கடித்து பார்பன கிரி வெற்றிபெற பாடுபட்ட நமது தமிழின தலைவர் நினைத்தால் மலைவாழ் சங்கமா ஜனாதிபதி ஆகலாம்.

  ReplyDelete
 2. //அரசு செலவுல ஒலகம் சுத்த
  ஆசைப்பட்டு........
  சொந்த செலவுல சூனியம்
  வச்சுக்கிறீங்களோ..............??????? னு
  எனக்கு தோனுது..............//

  அதேதான்...

  ReplyDelete
 3. //அப்புடியே 1988 ல இருந்து
  இன்னிக்கு வரைக்கும்
  அந்தப் பழங்குடிகளுக்கு நீங்க செஞ்ச
  நல்லதை எல்லாம் பட்டியல் போட்டுருந்தீங்கன்னா
  நல்லா இருந்துருக்கும் .........//

  அதானே!! ஏன் இதெல்லாம் செய்ய மாட்டேன்றாங்க??

  ReplyDelete
 4. சங்மா - சங்(கு)மா??

  பாக்கலாம்... இன்னும் ரெண்டு வாரத்துல அடுத்த ஊர்சுற்றி யாருன்னு தெரிஞ்சுடும்.

  ReplyDelete
 5. அரசியல் பற்றி அறிந்த, ஆனால் அரசியல் பண்ணத் தெரியாத / அரசியல் சாக்கடைக்குள் இன்னும் இறங்காத ஒரு தேசபிமானியைத் தெரிவு செய்வது சரியாக இருக்குமென நான் நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. யார வேணும் நாளும் ஜனாதிபதி ஆக்குங்க.. ஆனா அவங்களோட பாஸ்போர்ட் மட்டும் கான்செல் பண்ணிடுங்க.. இல்லைனா நம்ம காசுல நார்னியா நாட்டுக்கு கெளம்பிடுவாங்க..

  ReplyDelete
 7. அது எப்புடி சார்
  உங்களால மட்டும்
  பருவமழைல பட்டாசு வெடிக்க முடியுது .......?// he he he

  ReplyDelete