அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Wednesday, May 30, 2012

என் அன்பான நேற்றுகளுக்கு........

முன்குறிப்பு 


வெறும் யதார்த்தங்களை மட்டும்
என்னுடன் வைத்துக்கொண்டு,
எழுத்து வானத்தை ஏக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருந்த என் முதுகில்
சிறகுகளைப் பொருத்தி .......

'' பயம் தவிர்த்துப் பற........'' என்று சொன்ன
அன்பு நண்பன் ரஹீம் கஸாலி  யோடு
தொடங்கும் முன் ஒரு வார்த்தை.......

நன்றி நண்பனே
சிறகு தந்த உன் நட்பிற்கு...............


                                                               
திரும்பிச் செல்லமுடியாத வழித்தடங்களினூடே
சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப் பேரூந்தின்
ஜன்னலோரம் அமர்ந்தபடி........

தொண்ணூற்றி மூன்றுகளுக்கும்
தொண்ணூற்றி ஆறுகளுக்கும் இடையேயான
கால இடைவெளியின் கல்லறையில்
எலும்புக்கூடுகளாய் கிடக்கும் - என்
சதைப்பிடிப்பான கனவுகளுக்குள்
நுழையப்பார்க்கிறேன்...............

மனசின் மடிப்புகளில் புழுதிபடிந்து கிடக்கிறது
வயசின் விரல்களில் நகம் முளைத்திருந்த அந்த  வசந்த காலம் .................

அதை தூசு தட்டி துடைத்து வைக்க போகிறேன்........

நூற்றுக்கணக்கில் நீர்த்துக்கிடக்கும்
நாற்றமெடுத்த நிகழ்வுகளுக்கு இடையிலும் - என்
வாழ்க்கைத்தொட்டி சேகரித்துவைத்த
அழகிய குப்பை இது..............

நேற்றுகள் கடித்துக் குதறிய வாழ்க்கையின் -இந்த
காயம்படாத மிச்சத்தை
இன்றுகளின் இறகெடுத்து வருடப்போகிறேன்.......

உள்ளில் உறங்கும்
துள்ளித் திரிந்த
பள்ளிக் காலத்தை -இங்கே
அள்ளித் தெளிக்க
ஆசைப்படுகிறேன்.............

அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி.........

விரும்பிய ஜன்னல்களை-நான்
திரும்பிய பக்கமெல்லாம்
திறந்துவைத்த இடம்....................

எடுத்துவைத்த முதல் அடியிலிருந்து
முடித்து திரும்பிய கடைசிப்படிவரை
கவிதை.................

அகில மொழிகள் கடந்த
அழகுக் கவிதை............

எழுத்துக்களே இல்லாமல்
எழுதப்பட்ட கவிதையை -இன்று
வரிவிடாமல் வாசிக்கப் போகிறது மனசு..........

                                                             (காத்திருங்கள்....... அடுத்த ஜன்னலை அதிகம் தாமதிக்காமல் திறக்கிறேன்)

4 comments:

  1. டே.... வெண்ணை உனக்கு பலதடவை சொல்லிட்டேன், நன்றி எல்லாம் சொல்லி என்னை அன்னியப்படுத்த வேண்டாம் என்று.....

    ReplyDelete
    Replies
    1. நீ திட்டுவேனு தெரியும்........ ஹி..ஹி.... உன்கிட்ட திட்டு வாங்கியும் ரொம்ப நாள் ஆச்சு........... அதான்.............

      Delete
  2. தொண்ணூற்றி மூன்றுகளுக்கும்
    தொண்ணூற்றி ஆறுகளுக்கும் இடையேயான......////
    அந்த 2002-ஆம் ஆண்டை விட்டுட்டியே.....அறந்தாங்கியையே ரவுண்டு வருவோமே?

    ReplyDelete
    Replies
    1. 2002 இல்லாம இந்த பதிவ முடிக்கவே முடியாதுடா...........

      Delete