அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Monday, June 11, 2012

என்னய்யா நடக்குது இங்க......?

ஒரு வழியாக வாக்குப் பதிவை
எட்டியிருக்கிறது புதுக்கோட்டை இடைத் தேர்தல் 

தேமுதிக வேட்பாளர் வெற்றிபெற்றால் பத்து நாளில் புதுக்கோட்டையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து விடுவதாக விஜயகாந்த் உறுதி கூறி இருக்கிறார்............

மாவட்டத்துக்காரன் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.......

அதே நேரம் கேப்டன் சொல்கிற பல விஷயங்கள் எனக்கு புரிவதே இல்லை.
''சாதனை செய்திருந்தால் மக்கள் வெற்றிபெற வைப்பார்கள்'' 
என்று உறுதிபட கூறும் விஜயகாந்த் அவர்களே...............
பொதுவாகவே இடைத்தேர்தல் முடிவுகள் என்பவை பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும்  என்பது எல்லோராலும் எளிதாய் ஊகிக்க முடிந்த விஷயம், ஊகம் உண்மையாகி ஒருவேளை அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் '' அவர்கள் சாதனை செய்தவர்கள்'' என்று நீங்களே ஒத்துக்கொண்டது போல் ஆகிவிடாதா.........?

ஒரு பேச்சுக்கு உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்..........
நீங்கள் செய்த எந்த சாதனைக்காக மக்கள் உங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகிவிடாதா......?

இப்படித்தான் சில தினங்களுக்கு முன் திருச்சியில் நீங்கள் பேசிய போது ஒரு அதிபுத்திசாலித் தனமான கேள்வியை கேட்டீர்கள்..........

'' நான் சட்டசபைக்கு வருவதே இல்லை என்று குற்றம் சுமத்துகிறார்களே..... நான் சட்டசபைக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பார்களா? '' - என்று,
அமாவாசைக்கும் அப்துல்லாவிற்கும் என்ன கேப்டன் சம்பந்தம்.....?
பெட்ரோல் விலையை தமிழக சட்டமன்றமா நிர்ணயிக்கிறது....?
அது அம்பானிகளால் அம்பானிகளுக்காக நடத்தப்படும் மத்திய அரசு விவகாரம் என்பது கூடவா மறந்துவிட்டது உங்களுக்கு..........?

என்னமோ போங்க கேப்டன்.................

மைக்கை பிடித்த மறுநிமிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் தீக்குச்சி கிழித்து வீசும் கொள்கை கொண்ட நீங்கள், இந்த இடைத் தேர்தல் மேடைகளில் அவர்களை மறந்து போனதின் மாயம் என்னவோ........?

ஒரு
அரசியல்வாதிக்கான அறிகுறிகள் உங்களிடமும் தென்படத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.......

நீங்க நடத்துங்க கேப்டன்............


புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவதை ஒட்டி திருச்சி,புதுக்கோட்டை இடையே ஐந்தாறு மணிநேரங்களுக்கு ஆட்டோ முதல் ஆடுமாடுகள் வரை ஓட அனுமதிக்கவில்லையாம் காவல்துறை.......
இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லைதான்,ஆனால்..... ஆபத்தில் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப் போன ஆம்புலன்சையும்
இரண்டுமணிநேரம் நிறுத்திவைத்த காவல்துறையின் கடமை உணர்ச்சிக்கு
தலைவணங்குகிறேன்..........

மம்தாவும், முலாயமும் காங்கிரஸ் அறிவிக்கப்போகும்  ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கும் விசயத்தை ஆயுதமாக வைத்து மத்திய அரசிடமிருந்து தங்களது மாநிலங்களுக்கான சிறப்பு நிதியைப் பெறுவதில் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்......
நமது முதல்வரோ தன்சார்பாக ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துவிட்டு அவருக்கு ஆதரவு திரட்டும் வேலையில் மும்முரமாக இருந்துகொண்டிருக்கிறார்..........

வாழ்க சனநாயகம் .............


கடந்த வாரத்தில் ஒரு விழாவில் பேசிய கனிமொழி...... இந்திய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அதற்கு காரணம் கருணாநிதியின் அரசியல் நேர்மையும், மகாத்மா காந்தி முதல் நெல்சன் மண்டேலா உட்பட ஐந்தாறு மாபெரும் தலைவர்களின் பெயரைக்குறிப்பிட்டு அவர்களின் வழியில் அரசியல் செய்பவர் கருணாநிதி என்றும் பேசியதாக வாசிக்க முடிந்தது......

எல்லாம் ஓகே மேடம்............

ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த மாபெரும் தலைவர்களுடைய வாரிசுகளுக்கு இரண்டுலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பதும் திஹார் ஜெயில் கதவுகளுக்கு எத்தனை கம்பிகள் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..............

- அறந்தாங்கியான் -


4 comments:

  1. தலைவர்களுடைய வாரிசுகளுக்கு இரண்டுலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பதும் திஹார் ஜெயில் கதவுகளுக்கு எத்தனை கம்பிகள் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..............////
    நீ கலக்குடா.....கலக்கு

    ReplyDelete
  2. அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் '' அவர்கள் சாதனை செய்தவர்கள்'' என்று நீங்களே ஒத்துக்கொண்டது போல் ஆகிவிடாதா.........?
    ஆம்...சாதனை செய்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்....வாக்காளர்களுக்கு அதிகம் பணம் கொடுத்ததில்....

    ReplyDelete
  3. அந்த மாபெரும் தலைவர்களுடைய வாரிசுகளுக்கு இரண்டுலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பதும் திஹார் ஜெயில் கதவுகளுக்கு எத்தனை கம்பிகள் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்...........

    இந்த கடைசி பாரா தான் செம்ம கொட்டு.. கலக்குங்க தல.. ---கணேஷ்

    ReplyDelete