அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Saturday, June 2, 2012

பவர் ஸ்டாரும்..... கோபிநாத்தின் கோமாளித்தனமும்........


எல்லாரும் எழுதிட்டாங்க இதப்பத்தி .......
நான் ஏன் எழுதல.......? அப்டீன்னு நாளைக்கு ஒரு கேள்வி வந்துடக்கூடாது பாருங்க .......... அதான்...... (ஹி ஹி ........)

நீயா? நானா? நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பவர் ஸ்டாரை அழைத்து
தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளின் மூலம்
தான் ஒரு ஊடகப் புலி(ளி) என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்
நீயா நானா கோபிநாத்.........

அவரது முதல் கேள்வியிலேயே நான் புல்லரித்துப் போனேன் ........ ஏன் போலி கௌரவம் அவசியம்னு நெனைக்கிறீங்க.........? அப்டீன்னு அவரப்பாத்து...... இல்ல இல்ல பவரப்பாத்து கேட்டாரு............
போலி கௌரவம் அவசியம்னு பவர் ஸ்டார் எப்பவாச்சும் எங்கயாச்சும் பேட்டி குடுத்தாரா மிஸ்டர் கோபிநாத்.......????????

அடுத்து பவர பாத்து
'' உங்கள யாருன்னே எனக்கு தெரியாது ''னு சொல்லிட்டு அடுத்த கேள்விக்கு போனாரு.......
உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க மிஸ்டர் கோபிநாத், அவர சாரி பவர உங்களுக்கு நெசமாவே தெரியாதா........?

உங்களுக்கே தெரியாதஒரு ஆளை உங்கள் தொலைக்காட்சியின் மிக பிரபலமான(?????????????) ஒரு நிகழ்ச்சிக்கு எப்புடி பாஸ் சிறப்பு விருந்தினரா அழச்சீங்க.......?

இன்னொரு சிறப்பு விருந்தினரும் இந்த நிகழ்ச்சில இருந்தாரு திரு.செல்வப் புவியரசு அவர்கள்........ அவரு பவருக்கு சொன்ன கருத்து இருக்கே.........
அடடா...... பொன்னெழுத்துக்களால் பொறி(ரி)க்கப் படவேண்டிய கருத்து.....

''சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் நடிக்க வந்துவிட்டார்''

புவியரசண்ணே....... நூறு சதவீத சினிமா பாரம்பரியத்தோடவும், பின்புலத்தொடவும்  சினிமாவுக்குள்ள நுழஞ்சு இன்னிக்கு கொடிகட்டிப் பறந்துகிட்டு இருக்கிற ஹீரோக்களோட முதல் படத்த முடிஞ்சா பாருங்கண்ணே.......

கடைசியாக ஒரே ஒரு விஷயம்.........

இவர்களின் கூற்றுப்படி பவர் போலி கௌரவத்தை விரும்புகிற ஒரு மனிதர் என்றே வைத்துக்கொண்டாலும் அந்த போலி கௌரவம் இந்த சமூகத்தையும் மக்களையும் எந்த வகையில் பாதித்தது.........?

போலி கௌரவத்திற்காகவும்,சுயநலத்திற்காகவும்,பரஸ்பரம் பழிவாங்கிக்கொள்வதற்காகவும் மட்டும் பதவியைப் பயன்படுத்தி கொண்டிருக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளை தங்கள் நிகழ்ச்சியில் அமரவைத்து இதுபோல் கேள்விக்கணைகளை தொடுக்கும் தைரியம் இருக்கிறதா இந்த மீடியாக்களுக்கு?

சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற விளம்பரத்துடன் தனிமனித இயல்புகளில் சேற்றை வாரி இறைக்க மேடை அமைக்கும் தரம் தாழ்ந்த நீக்கங்களை  இத்துடனாவது நிறுத்திக்கொள்ளுங்கள்...........
-அறந்தாங்கியான்-

7 comments:

  1. neththiyadi padhivu gopinaaththirkku uraiththaal sari vara mami kazhudai aanaal enbadhupol vijay tv ill varu nigazhchchigal avvalavu sollikollumbadiyaaga illai
    nandri
    surendran

    ReplyDelete
  2. நல்ல பதிவு...கோபியை முதல கோட்டை (coat) கழட்ட சொல்லுங்கப்பா...ஒரே உப்புசம் ....தாங்க முடியல...

    ReplyDelete
  3. அந்த நிகழிச்சியில் எப்போதுமே. அவர் எப்படி போகனும்னு பிக்ஸ் பண்ணிட்டு போவாங்க. நோ ஓபன் டிசகிச்சியன்

    ReplyDelete
  4. இன்னும் எத்தனை பேர் எழுதுவாங்க பவரை பத்தி.....
    அந்தளவுக்கு பேமஸ் ஆக்கிய கோபிக்கு நன்றி.

    நல்ல அலசல்....பாஸ்

    ReplyDelete
  5. நச் பதிவு... வாழ்த்துக்கள். தொடரட்டும் உன் அதிரடி

    ReplyDelete
  6. கோட்டு கோழியான் டி.ஆர்.பி ரேடிங் ஜாஸ்தியாகக பவர கூட்டி வந்திருக்கான் .. அவன் நெனச்சா மாதிரி ரேடிங் ஏறிடிச்சு ஆனா அவன் கோட்டு கிழிஞ்சிரிச்சு.. ஹி.ஹி..

    ReplyDelete